சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் கடத்தல்..!

சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளார்.
சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் கடத்தல்..!
Published on

சென்னை,

சென்னை, திருவேற்காடு அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது காரை மறித்த கும்பல் அவரை கடத்தி உள்ளனர். நிதி நிறுவனம் நடத்திய அவரது சகோதரர் ரூ.3 கோடி மோசடி செய்ததால் கடத்தல் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தேவ் ஆனந்தை கடத்தி சென்ற மர்மகும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com