வேன்களில் கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வேன்களில் கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு வேன்களில் கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு வேன்களில் கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து பிக்கப் வேன்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிரிவலப்பாதையில் போலீசாரை பார்த்ததும் 2 வேன்களில் இருந்து டிரைவர்கள் கீழே இறங்கி தப்பியோடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேன்களில் சோதனை செய்தனர். 2 வேன்களிலும் 50 கிலோ எடை கொண்ட 90 மூட்டைகளில் 4½ டன் ரேஷன் அரிசி இருந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசிகளுடன் 2 வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவர்களான திருப்பத்தூர் வல்லரசு (வயது 25), வேப்பனப்பள்ளி ஜெயராம் (27) மற்றும் அரிசி ஆலை உரிமையாளரான மகாராஜகடையை சேர்ந்த கோபால் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story