ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
மூடை, மூடையாக ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மூடை, மூடையாக ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை விமான நிலையம் அருகே உள்ள 4 வழிச்சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 40 கிலோ எடை கொண்ட 38 ரேஷன் அரிசி மூடைகளில் சுமார் 1520 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மூடை, மூடையாக கடத்தி கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அந்த சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அதில் அவர்கள் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த கண்ணன், மதுரை கேட்லாக் ரோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ், மதுரை முனியாண்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், 1½ டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.