ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தென்காசி அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று தென்காசி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதாக மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த ஆசிர்ராஜா (வயது 45) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முத்துராஜா என்பவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com