கோவிலூர் கிராமத்தில் ரூ.2¼ லட்சத்தில் ரேஷன் கடை சீரமைப்பு


கோவிலூர் கிராமத்தில் ரூ.2¼ லட்சத்தில் ரேஷன் கடை சீரமைப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஊராட்சி கோவிலூர் கிராமத்தில் உள்ள பகுதி நேர ரேஷன் கடை, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி ஏற்பாட்டில் ரூ.2.27 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு, பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றி ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், ஊராட்சி செயலர் பிரகாசம், துணைத் தலைவர் சித்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story