ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கூட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கூட்டம்
x

ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கூட்டம்

நாகப்பட்டினம்

நாகையில் ரேஷன்கடை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் குமார், பாலதண்டாயுதம், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் சரியான எடையில் பொட்டலம் இட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பழனிவேல் நன்றி கூறினார்.


Next Story