ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு


ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு
x

இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே வெள்ளாஞ்சார், தானுமாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வெள்ளாஞ்சார் வருவாய் கிராமத்தில் 44.09 ஏக்கர் நிலத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மேலும் அவர்களிடம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தினை கோவில் வசம் ஒப்படைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் செயல் அலுவலர் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில், நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் தாமாகவே முன் வந்து நிலத்தினை கோவில் வசம் ஒப்படைப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் எனவும் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரின் அறிவுறுத்தலின் படியும், புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில், ஆலய நிலங்கள் தாசில்தார் ரெத்தினாவதி, கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், இலுப்பூர் ஆய்வாளர் யசோதா மற்றும் கோவில் பணியாளர்கள் மூலம் நேற்று 44.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு கோவில் வசம் கொண்டு வரப்பட்டது.

1 More update

Next Story