உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு


உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு
x

உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ.10 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலங்களை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

வருவாய்துறை சார்பில் அந்த நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நேற்று ஆர்.டி.ஓ. கனிமொழி முன்னிலையில் வருவாய்துறையினர் உத்திரமேரூர் போலீசார் பாதுகாப்போடு பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

மேலும் அந்த இடத்தை மீண்டும் ஆக்கிமித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது உத்திரமேரூர் தாசில்தார் குணசேகரன் உள்பட வருவாய் துறையினர் போலீசார் பலர் உடன் இருந்தனர்.


Next Story