மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் வெளியீடு


மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் வெளியீடு
x

18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2023-24-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது.


Next Story