நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்


நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 30 Sept 2023 1:00 AM IST (Updated: 30 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பிதிர்காடு அருகே நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுக்கா பிதிர்காடு அருகே காமராஜ் நகரில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வருவாய்துறையினரிடம், பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் குரு, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து மற்றும் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story