குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி
திட்டச்சேரியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடியிருப்பு பகுதிகள், வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதை தொடா்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு வெள்ளத்திடல் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. இதை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து 15-வது வார்டு உறுப்பினர் மேகலா பரமசிவன், பொக்லின் எந்திரம் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
Related Tags :
Next Story