திருச்செந்தூரில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரதின நினைவு இரும்பு வளைவு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு


திருச்செந்தூரில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரதின நினைவு இரும்பு வளைவு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரதின நினைவு இரும்பு வளைவு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் சுதந்திர தின நினைவு இரும்பு வளைவு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த 1-ந் தேதி நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட நீதிபதி ஜே.பிரபுதாஸ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த இரும்பு வளைவை முறைப்படி திருச்செந்தூர் நகராட்சி வசம் ஒப்படைக்கும் விதமாக நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம், திருச்செந்தூர் நகராட்சி பொறியாளர் சரவணனிடம் ஒப்படைத்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட சட்ட ஆலோசகர் எட்வர்டு, மாவட்ட அமைப்பாளர் திருப்பதி விஜி, மாவட்ட கவுரவ ஆலோசகர் நெல்லையம்மாள், திருச்செந்தூர் வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா, சட்டக் கல்லூரி மாணவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் ராஜமாதங்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story