தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு


தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:45 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மின் கம்பம் சீரமைக்கப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மின் கம்பம் சீரமைக்கப்பட்டது.

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் உள்ளன.இந்த நிலையில் நிம்மேலி ஊராட்சியில் இருந்து மருதங்குடி ஊராட்சிக்கு செல்லும் சாலையில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்பட்டன. இதனால் மின் கம்பிகள் தாழ்வாக சென்றன. மேலும் அங்கு சாய்ந்திருந்த மின் கம்பம் ஒன்றுக்கு பொதுமக்கள் மரக்கட்டைகளை கொண்டு முட்டு கொடுத்து வைத்திருந்தனர்.

சீரமைப்பு பணி

மின் பாதை அபாய நிலையில் இருந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வந்தனர். இந்த பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களையும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக செய்தி கடந்த 19-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரமானது.இதன் எதிரொலியாக நேற்று மின்சாரத் துறையினர் மருதங்குடி ஊராட்சியில் தாழ்வாக சென்ற மின் கம்பிகளை சீரமைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், சீரமைத்த மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story