மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தஅலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்கலெக்டர் சரயு வேண்டுகோள்


மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தஅலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்கலெக்டர் சரயு வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 July 2023 1:00 AM IST (Updated: 10 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் சரயு வேண்டுகோள் விடுத்தார்.

ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலக கூட்டஅரங்கில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி பேசியதாவது:- மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அன்று முதல் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த 1,094 ரேஷன் கடைகளில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

முழு ஒத்துழைப்பு

மேலும் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவது குறித்தும் இந்த முகாம்களில் பணியாற்ற கூடியவர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story