சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு

பந்தலூரில் சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்கப்பட்டது.
சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு
Published on

பந்தலூர்

பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே பாக்கனாவில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை சேற்றில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவின்படி, பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்ஷன், வனகாப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேற்றில் சிக்கிய காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அங்கிருந்து காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com