காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு

திமிரி அருகே காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 47) இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பச்சையம்மாள் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பச்சையம்மாள் சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com