பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரம்; முதல்-அமைச்சருக்கு திருப்தி இல்லாததால் நீக்கினார் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரம்; முதல்-அமைச்சருக்கு திருப்தி இல்லாததால் நீக்கினார் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x

பெண் அமைச்சர் மீது முதல்-அமைச்சருக்கு திருப்தி இல்லாததால் அவரை நீக்கியதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 6 மாதத்துக்கு முன்பு சந்திர பிரியங்காவின் பணியில் தொய்வு இருக்கிறது. அவரது பணியில் திருப்தி இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விரும்பினார். ஒரே பெண் அமைச்சர் என்பதால் அழைத்து பேசி பணியாற்ற சொல்லுங்கள் என்று கூறினேன்.

போக்குவரத்து உள்பட முக்கிய துறைகளை அவர் வைத்திருந்தார். முதல்-அமைச்சருக்கு திருப்தி இல்லாததால் நீக்க வேண்டும் என்று தெரிவித்தார். முதல்-அமைச்சர் தனது அமைச்சரவையில் ஒரு அமைச்சரை அதிருப்தி காரணமாக நீக்கி உள்ளார். இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது முதலில் அல்ல. சந்திர பிரியாங்காவுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருந்தால் என்னை சந்தித்து இருக்கலாம். சாதி ரீதியாக, பாலியல் ரீதியாக பிரச்சினை இருந்தால் அதுபற்றி என்னிடம் கூறி இருந்தால் துணிச்சலாக கேட்டு இருப்பேன். பாதுகாப்பாக இருந்து இருப்பேன்.

மாநிலங்களில் ஆளுநரிடம் மனு தந்ததும் ஏற்கப்படும். ஆனால் புதுச்சேரி துணை நிலை மாநிலம் என்பதால் மத்திய உள்துறைக்கு அனுப்பி அங்கிருந்து குடியரசு தலைவருக்கு சென்று ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். இது முதல் நாள் நடந்தது. இதை தெரிந்து கொண்ட சந்திர பிரியங்கா அடுத்த நாள் ராஜினாமா செய்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story