ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் திடீர் சாவு

திருவலாங்காடு ரெயில் நிலையத்தில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் திடீரென இறந்தார்.
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் திடீர் சாவு
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காட்டை அடுத்த பெரிய களக்காட்டூர் கிராமத்தை சர்ந்தவர் துரைராஜ் (வயது 75), ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர், சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக இரவு 11.30 மணியளவில் திருவலாங்காடு ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

பின்னர் நடைமேடையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக உட்கார்ந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com