100 நாள் வேலை வழங்கக்கோரி சாலை மறியல்
100 நாள் வேலை வழங்கக்கோரி சாலை மறியல்
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென்று கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு இந்த ஆண்டு முடியும் நிலையில் இதுவரை 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக பணி வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் அனைவருக்கும் 100 நாள் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் எங்களுக்கு மட்டும் வழங்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. எங்களுக்கான பணியை வழங்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய பணி வழங்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து மறியிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.