சாலை அமைக்கும் பணி தொடங்கியது
ஏலகிரிமலையில் மறியல் செயததன் எதிரொலியாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ராயனேரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் தரை பாலம் உடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கைகள் வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் அத்தனாவூரிலிருந்து நிலாவூர் செல்லும் சாலை அருகே ராயனேரி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் மற்றும் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்படி ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் நேற்று உடனடியாக ராயனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.