உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு:விவசாயிகள் சாலை மறியல்


உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு:விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Jun 2023 5:45 AM GMT (Updated: 6 Jun 2023 7:18 AM GMT)
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 152-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எழுத்துப்பூர்வமாக நிலங்களை எடுக்க மாட்டோம் என உறுதி அளிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் பதில் இல்லாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சாலை மறியல்

இதையடுத்து விவசாயிகள் திடீரென உத்தனப்பள்ளியில் உள்ள ராயக்கோட்டை சாலையில அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்த விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story