வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ கோடி வெள்ளி; ரூ.2 லட்சம் திருட்டு-போலீசார் விசாரணை


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ கோடி வெள்ளி; ரூ.2 லட்சம் திருட்டு-போலீசார் விசாரணை
x

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ கோடி வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 45). வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் நானும் எனது உறவினர் ஒருவரும் சேர்ந்து வெள்ளிப்பட்டறை தொடங்கி நடத்தி வந்தோம். இருவரும் பிரிந்து விட்டோம். தற்போது நான் தனியாக வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறேன். சம்பவத்தன்று நான் வீட்டில் இல்லாத போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து திருட்டு போன வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடி சென்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story