கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அகஸ்தீஸ்வரம் அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இருவர், எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை "ஆ" கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் தர்ஷினி (வயது 13) த/பெ.இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com