மாரடைப்பால் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

ரோந்து பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பால் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக (ஏட்டு) பணிபுரிந்து வந்த ரவிக்குமார் (வயது 59) என்பவர் நேற்று (3-9-2024) காலை மீனம்பாக்கம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

முதல்நிலை காவலர் ரவிக்குமாரின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ரவிக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com