பிட்காயின் வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி


பிட்காயின் வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி
x

விழுப்புரம் அருகே பிட்காயின் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

சிறுவானூர் கிராமத்தை சேர்ந்தவர்

விழுப்புரம், திருமலை நகரைச் சேர்ந்தவர் முகமதுஅக்பர்(வயது 52) என்பவர் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் டெய்லரான எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த மாயவன் மகன் வேணுகோபால் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தான் கிரிப்டோகரன்சி, பிட் காயின்' போன்ற திட்டத்தில் முதலீடு செய்து பல லட்சங்கள் சம்பாதித்ததாகவும், இதில் முதலீடு செய்தால் மிக விரைவில் பல மடங்கு பணம் கிடைக்கும் என்றும் கூறினார்.

ரூ.3 கோடிக்கு மேல் மோசடி

இதை நம்பி வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.3 லட்சம் முதலீடு செய்ததுடன் எனக்கு தெரிந்த நபர்களையும் முதலீடு செய்ய வைத்தேன். விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் ரூ.80 லட்சம் வரை கட்டியுள்ளனர். ஆனால் கட்டிய பணம் திரும்ப வரவில்லை‌. அவரிடம் கேட்டபோது விரைவில் பணத்தை தருவதாக கூறிவந்தார். ஆனால் திடீரென அவர் தலைமறைவாகிவிட்டார். இதேபோல் திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். எனவே வேணுகோபாலை உடனடியாக கைது செய்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story