விவசாயி வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருட்டு


விவசாயி வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருட்டு
x

விவசாயி வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை-பொன்னை ரோட்டில் சிப்காட் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 59), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (48). அங்குள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ் (33), தினேஷ் (24) என 2 மகன்கள் உள்ளனர். தினேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி தனலட்சுமி, ராஜேஷ் வேலைக்கும், முனுசாமி வயலுக்கு சென்றனர். பின்னர் முனுசாமி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும்.

இதுகுறித்து முனுசாமி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story