

சென்னை,
தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். இதையொட்டி தமிழ்நாடு பெண் காவலர்கள் பொன் விழா ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பெண் காவலர்களின் 50 ஆண்டு பங்களிப்பை முன்னிட்டு பாய்மர படகு பயணம் தொடங்கப்பட்டது. இந்த பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகம், பழவேற்காடு, கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தில் 25 பெண் காவலர்கள் பயணிக்கின்றனர். கடல் பயணம் தொடங்குவதற்கு முன், படகுகளில் மகளிர் காவலர்கள் சாகசம் செய்தனர்.