கோவிலில் சாமி சிலைகள் உடைப்பால் பரபரப்பு


கோவிலில் சாமி சிலைகள்   உடைப்பால் பரபரப்பு
x
திருப்பூர்


பொங்கலூர் அருகே மர்ம நபர்களால் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை வீரன் ேகாவில்

பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தில் அரிசன காலனி உள்ளது. இங்கு மதுரைவீரன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் சிலைகள் உள்ளன. இந்த கோவிலுக்கு அப்பகுதியினர் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதி பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு சிலைகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் பரவியதால் பொதுமக்கள் பலர் அங்கு கூடினார்கள்.

சாமி சிலைகள் உடைப்பு

கோவிலில் உள்ள சிலைகள் சில உடைக்கப்படும் வேல்கள் பிடுங்கி எறியப்பட்டும் கீழே கிடந்தது. இதனைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story