பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்

பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக ஏரிகளில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றன. இதனை தொடர்ந்து பாலக்கோடு தாசில்தார் ராஜா நேற்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது எர்ரனஅள்ளி ஏரியில் டிப்பர் லாரியில் மண் அள்ளி கொண்டிருந்தனர். தாசில்தாரை கண்டதும் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் அதனை பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com