சங்கடஹர சதுர்த்தி வழிபாடு


சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் பகுதியில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனர். இதே போல் சங்கராபுரம் திரவுபதிஅம்மன் கோவில் வன்னி விநாயகர், செல்வ விநாயகர், வாசவி கோவில் வளாகத்தில் உள்ள மஹோற்கட கணபதி, பொய்க்குணம் சாலையிலுள்ள நவசக்தி விநாயகர் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story