தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம்
தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் சோழவந்தானில் நடந்தது.
சோழவந்தான்,
மதுரை மாவட்ட பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர் சங்க கூட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூராட்சிகளின் மாநில சங்க தலைவர் பிச்சைமுத்து, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மதுரை கலெக்டர் மூலம் தமிழக அரசிடம் தகவல் தெரிவிப்பது தொடர்பாகவும், தூய்மை பணியாளருக்கு ஏற்படும் இன்னல்களை களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசினார். மாவட்ட தலைவர் மனசேகரன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் காளிமுத்து, சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்டி வரவேற்றார். எழுமலை பிச்சைமணி வாழ்த்துரை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பரவை பழனிமுத்து, அலங்காநல்லூர் மூர்த்தி, பேரையூர் கணேசன், எழுமலை ரவிக்குமார், வாடிப்பட்டி ரகு மற்றும் மதுரை மாவட்ட அனைத்து பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.