பெரம்பலூர் நகர்-ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள்


பெரம்பலூர் நகர்-ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள்
x

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகர்-ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெரம்பலூர்

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பையில்லா இந்தியாவாக மாற்ற தூய்மையே சேவை என்ற நிகழ்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. அதன்படி பெரம்பலூர் தெப்பக்குளத்தில் நடந்த தூய்மை பணியை நகராட்சி ஆணையர் ராமர் தொடங்கிவைத்தார். இதில் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக பகுதிகளிலும் தூய்மையே சேவை நிகழ்வில் பொதுமக்கள், தன்னார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

இதேபோல் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி அணையில் பொதுப்பணி துறை சார்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை மறுதையாற்று வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் மருதமுத்து, தினகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்போது அணைக்கட்டு பகுதியை சுற்றிலும் உள்ள புல், புதர்கள் அகற்றப்பட்டு அந்தப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன. அப்போது அணைக்கட்டு பகுதியை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் தூய்மை பணியினை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன் இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


Next Story