முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு


முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு
x

முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு நடந்தது.

கரூர்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூர், பாலமலை மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story