மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலி


மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலியானார்.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே வல்லம் கீரைக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 66). இவருடைய மனைவி விஜயலட்சுமி(61). சம்பவத்தன்று ஜெயராஜ் தனது மனைவியுடன் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள ஆயர் இல்லம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மீது பள்ளி பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மெலட்டூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவரான சுகுமார்(47) என்பவரை கைது செய்தனர்.

1 More update

Next Story