பிரமீடு போல நின்ற பள்ளி மாணவர்கள்

சாயல்குடி அருகே பள்ளி விளையாட்டு விழாவில் பிரமீடு போல பள்ளி மாணவர்கள் நின்று சாகசம் செய்தனர்.
பிரமீடு போல நின்ற பள்ளி மாணவர்கள்
Published on

சாயல்குடி,

சாயல்குடி அருகே மலட்டாறு விலக்கு ரோட்டில் உள்ள வி.வி.எஸ்.எம். நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கு பள்ளி நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அங்காள ஈஸ்வரி வரவேற்றார். பள்ளி தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் போது பள்ளி மாணவர்கள் பிரமீடு போல வடிவமைத்து நின்றது அனைவரையும் கவர்ந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். உடற்கல்வி ஆசிரியர் திருமணி செல்வம் நன்றி கூறினார். போட்டிகளை உடற் கல்வி ஆசிரியர் கணேஷ் ஒருங்கிணைத்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com