உபதலை அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


உபதலை அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உபதலை அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே உபதலை அரசு மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி சார்பில், அறிவியல் கண்காட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. மாணவ-மாணவிகள் 63 பேர் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்தனர். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் சார்ந்த அடிப்படை கருத்துகளை விளக்கும் வகையில் படைப்புகள் இடம் பெற்றன. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பிரிவில் பிரகாஷ் முதலிடம், சரண்யா 2-ம் இடம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பிரிவில் வெற்றிசெல்வன் முதலிடம், ரவிதூல்பசிரியா 2-ம் இடம் பிடித்தனர். 9 முதல் 10-ம் வகுப்பு வரை பிரிவில் முகமது மொய்தீன் முதலிடம், ராமர் 2-ம் இடம், 11, 12-ம் வகுப்பு பிரிவில் ராஜேஷ் கண்ணன் முதலிடம், அன்பு ஜாக்சன் 2-ம் இடத்தை பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர் பிரகாசம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஐயரின் ரெஜி, அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை உஷா தேவி, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பேசினர். முடிவில் ஆசிரியை எபினேசர் ராஜாத்தி நன்றி கூறினார்.


Next Story