அனுமதியின்றி செயல்பட்ட பழக்கடைக்கு 'சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட பழக்கடைக்கு சீல்
x

பண்ருட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட பழக்கடைக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி-கடலூர் மெயின் ரோட்டில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பண்ருட்டியை சேர்ந்த பிரபு என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் ஆற்காடு லுத்தரன் திருச்சபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தும், நகராட்சியின் அனுமதி பெறாமல் கடை வைத்துள்ளதாகவும், இந்த பழக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி பண்ருட்டி நகராட்சிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பழக்கடைக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story