

தேவகோட்டை,
தேவகோட்டை பஸ் நிலையத்தில் இஸ்மாயில் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர்.