பெட்டிக்கடையில் பதுக்கிய பட்டாசு திரிகள் பறிமுதல்
பெட்டிக்கடையில் பதுக்கிய பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் புதுதெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஆறுமுகத்தாய் (வயது 42) என்பவரின் பெட்டிக்கடையில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் திரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எளிதில் தீப்பிடித்து விபத்து ஏற்படுத்தக்கூடிய திரிகள் பட்டாசு ஆலைகளில் மட்டும் கையாண்டு வரும் நிலையில் பெட்டிக்கடையில் வைத்திருந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஆறுமுகத்தாயை கைது செய்த போலீசார் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு திரிகள் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story