கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்


கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
x

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்

தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி பகுதியில் இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் உத்தரவின்பேரில், தோகைமலை போலீசார் கன்னல்வடநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராவல் மண் கடத்தியதாக லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மண் கடத்தல் தொடர்பாக பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்த குரு (வயது 35), லாரியின் உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (39) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story