மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 3 டிராக்டர்களை மறித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் 3 பேரும் டிராக்டர்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடி வீட்டனர். டிராக்டர்களை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரில் இருந்த 3 யூனிட் மண் மற்றும் 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com