மணல் கடத்திய வேன் பறிமுதல்
மணல் கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
ஆரணி
மணல் கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி அலுவலர்களுடன் தச்சூர் வழியாக நேற்று காலை சென்று கொண்டிருந்தார். தச்சூர் சமத்துபுரம் அருகே சென்றபோது எதிரே மணல் ஏற்றிய மினி வேன் வந்தது. அதிகாரியை பார்த்ததும் மினிவேனை நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடினார்.
இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் மினி வேனை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தாலுகா போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய யாருக்கு சொந்தமானது என விசாரணை நடத்தி தப்பி ஒடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story