30 டன் சோளம் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை


30 டன் சோளம் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
x

திருமங்கலம் வேளாண்மை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் 30 டன் சோளம் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் வேளாண்மை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் 30 டன் சோளம் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

30 டன் சோளம் விற்பனை

திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று செங்கப்படை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி மற்றும் கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட 29978.55 கிலோ இருங்கு சோளம் மறைமுக ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.36-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ. 10 லட்சத்து 79 ஆயிரத்து 228-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் 30 .டன் விளைபொருள் ரூ.10 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடைபெறுவது இதுவே முதல் முறை.

பணம் பட்டுவாடா

இந்த வர்த்தகத்தின் பணம் மின்னணு பரிவர்த்தனை மூலம் 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். விவசாயிகள் எந்தவித எடை குறைபாடு இன்றி நல்ல விலைக்கு விற்றதன் மூலம் அதிக லாபம் கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த தகவலை கண்காணிப்பாளர் ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.


Related Tags :
Next Story