சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை..!


சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை..!
x

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை 4-வது நாளாக இன்றும் மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளி மட்டும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story