செம்மண் கடத்தியவர் கைது
செம்மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே வடக்கு அகஸ்தியர்புரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ஜோசப் (வயது 47). வடமலை சமுத்திரம் கடனாநதி வாய்கால் அருகே உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வடமலைசமுத்திரத்தை சேர்ந்த மரியசுஜி, முதலியார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் சேர்ந்து டிராக்டரில் செம்மண்ணை கடத்திச் சென்றனர். இதுகுறித்து ஜான் ஜோசப் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கணேசனை கைது செய்தார். அவரிடமிருந்து ஒரு டிராக்டர், ½ யூனிட் செம்மண் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story