செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கில் கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com