விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய தனி மென்பொருள்


விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய தனி மென்பொருள்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் விடுதிகளில் தங்குபவர்க ளின் விவரங்களை பதிவு செய்ய தனி மென்பொருள் தயாரிக்கப் பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்
கோவை


அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் விடுதிகளில் தங்குபவர்க ளின் விவரங்களை பதிவு செய்ய தனி மென்பொருள் தயாரிக்கப் பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.


ஆலோசனை கூட்டம்


கோவை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பெண்கள் தங்கும் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.


போலீஸ் துணை கமிஷனர்கள் சண்முகம் (தெற்கு), சந்தீஸ் (வடக்கு), மதிவாணன் (போக்குவரத்து) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கூறியதாவது:-


கோவை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அவை பொருத்தப்பட்ட சில இடங்களில் செயல்படாமல் இருப்பது ஆய்வின் போது தெரிய வருகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவ தோடு, சரியாக செயல்படுகிறதா? என்று அவ்வப்போது குடியி ருப்பு நல சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


அடையாள அட்டை


கூடுதல் சேமிப்பு திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் பணிக்கு சேர்க்கப்படும் நபர்களிடம் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட விபரங்களை பெற்று பணியில் சேர்க்க வேண்டியது குடியிருப்பு சங்க நல நிர்வாகிகளின் பொறுப்பு.


கல்லூரிகள், தொழில்நிறுவனங்களில் ஏராளமான பிற மாவட் டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர். அதில் குடும்பம் இன்றி தனியாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அதில் யாருக்காவது போதைப்பழக்கம் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


மென்பொருள் தயாரிப்பு


அடுக்குமாடி குடியிருப்புகளில் சில மாதங்கள் மட்டுமே தங்குப வர்கள், விடுதிகளில் தங்குபவர்களின் விபரங்களை சேகரித்து பதிவு செய்ய தனியாக மென்பொருள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

அதில் தங்குபவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை விவரங் களை பதிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் அங்கு தங்குபவர்க ளின் விவரங்கள் நேரடியாக போலீசாருக்கு கிடைத்து விடும். எனவே நீங்கள் அந்த விபரங்களை தனியாக போலீஸ் நிலையங்களுக்கு தர வேண்டியது இல்லை.


இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story