சாஸ்தா கோவில் அணை நிரம்பியது


சாஸ்தா கோவில் அணை நிரம்பியது
x

தொடர்மழையால் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது பெய்த தொடர் மழையினால் இந்த அணை நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் நிரம்பி வெளியே வழிகிறது. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் நெல் பயிரிட்டுள்ளனர்.

இந்த அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டால் தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர், இளந்திரை கொண்டான், முகவூர், கொல்லங்கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும்.இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தொடர்மழையின் காரணமாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணையில் இருந்து செல்லும் நீரை பாசனத்திற்காக திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story