19 வயது கிரிக்கெட் போட்டிக்கு சிங்கம்புணரி வீரர் தேர்வு


19 வயது கிரிக்கெட் போட்டிக்கு சிங்கம்புணரி வீரர் தேர்வு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

19 வயது கிரிக்கெட் போட்டிக்கு சிங்கம்புணரி வீரர் தேர்வு

சிவகங்கை

சிங்கம்புணரி

தேசிய அளவிலான கூட்ஸ் பீகார் டிராபிக் கோப்பைக்கான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தானில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற போட்டியில் தமிழக அணி தேர்வாகி அரையிறுதி போட்டிக்கு சென்றுள்ளது. தமிழக அணியில் சிங்கம்புணரி அருகே பொன்னாடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் சைலேந்தர் தேர்வாகி உள்ளார். இடதுகை பந்துவீச்சாளரான சைலேந்தர் ேபட்டிங்கும் செய்வார். அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா, விதர்வா அணிகள் மோதுகின்றன. தமிழக அணியில் இடம் பிடித்துள்ள சைலேந்தருக்கு சிங்கம்புணரி வட்டார கிரிக்கெட் ஆர்வலர்கள் இளைஞர்கள், கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story