சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா


சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
x

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 8-ந் தேதி வரை தெப்பத்திருவிழா நடக்கிறது. இதனை தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் தவன திருவிழாவும், 11-ந்தேதி தவன சாற்றுமுறை திருவிழாவும் 12-ந்தேதி தாயார் தவன திருவிழாவும், 13-ந்தேதி ஆண்டாள் தவன திருவிழாவும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், நிர்வாக அதிகாரி க.வெங்கடேசன், மேலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story